ஜன்னல் ஓரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, 23 நவம்பர், 2013

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை...!



எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில் இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…

வெள்ளி, 22 நவம்பர், 2013

இலவசமாக Kaspersky Antivirus ஐ பயன்படுத்துவது எப்படி?




   Antivirus  தொகுப்பில்  மிகவும்  பிரபலமான Antivirus களில் Kaspersky Antivirus ஒன்றாகும். இந்த  கட்டண மென்பொருளான Kaspersky Antivirus இனை 
இலவசமாக எவ்வாறு பெறுவது மற்றும் Activate செய்வது என்று பார்ப்போம்.  இங்கு சென்று இந்த Trial Version ஐ  DOWNLOAD  செய்து Install  செய்து  கொள்ளவும்.

எவ்வாறு Activate செய்வது? 


* முதலில் Kaspersky Antivirus க்கான Key File களை DOWNLOAD செய்து Winrar கொண்டு  Extract செய்து கொள்ளவும்.

*பின்னர் தங்களின்  கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்து விடவும்.

*கணினியில் install செய்யப்பட்டுள்ள Kaspersky Antivirus  னை Open செய்து Activation Product என்பதை சொடுக்கவும்.

*தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் இந்த Serial Key யினை (1234567890) காப்பி செய்து பேஸ்ட்செய்யவும்.

*பின்னர் Next ஐ Cick செய்து அடுத்து தோன்றும் விண்டோவில் Browse என்பதை Click செய்யவும்.

*அடுத்து  Download செய்த Key File ஐ தேர்வு செய்து Next  என்பதினை Click செய்யவும்.

அவ்வளவுதான் Kaspersky Antivirus ஆனது Activate செய்யப்பட்டுவிடும்.

            (மீண்டும் Activate செய்ய மறுபடியும் இதே முறையை பயன்படுத்தவும் 

நன்றி. நவீன மாற்றம் 

Pen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்?




எப்போதும் எதற்குமே ஒரு மாற்று வழி நமக்கு அவசியம் ஆகிறது.கணினியை பொறுத்த வரையில் அதில் முக்கியமானது OS இன்ஸ்டால் செய்வதற்கு மாற்று வழிகள். சில வேளைகளில் நமது DVD Drive இயங்கவில்லை 
என்றாலோ அல்லது DVD Drive இல்லை என்றாலோ Pen Drive மூலம் மட்டுமே OS இன்ஸ்டால் செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று இன்று பார்ப்போம்.

பென் டிரைவ் ஆனது நமக்கு பல விதங்களில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். இதற்கு முன்னர் பென் டிரைவை எப்படி RAM ஆக பயன்படுத்துவது என்று பார்த்து இருந்தோம். 

இப்போது OS Install செய்ய எந்த பென் டிரைவை பயன்படுத்துகிறீர்களோ அதை உங்கள் கணினில் சொருகி ஒரு முறை Format செய்து விடவும். தொடர்ந்து கணினியிலேயே அது இருக்கட்டும். 

1. முதலில் இந்த இணைப்பில் சென்று  WinSetupFromUSB  என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யவும். 

2. RAR File ஆக டவுன்லோட் ஆகும் இதனை  Extract செய்து அதில் உள்ள Setup - ஐ Run செய்யவும். [இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை]

3. இப்போது கீழே உள்ளது போல அந்த மென்பொருள் இருக்கும். அதில் உங்கள் Pen Drive Detect ஆகி இருக்கும். 



4.  இப்போது உங்கள் பென் டிரைவ் பெயருக்கு கீழே Add To USB disk என்று உள்ளத்தில் உங்கள் Windows XP/Vista/7 Setup File ஐ நீங்கள் தெரிவு செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே DVD யில் உள்ளவர்கள் நேரடியாக அதனை தெரிவு செய்யலாம்.[நண்பர்களுக்கு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இது பயன்படும்.

இல்லை என்றால் OS-இன் ISO File-ஐ உங்கள் கணினியில் இருந்து தெரிவு செய்ய வேண்டும். இப்போது கீழே உள்ளது போல தெரிவு ஆகி இருக்கும். 


5.  உங்களுக்கு எதை தெரிவு செய்தீர்களோ அது மட்டும் தெரிவு ஆகி இருக்கும். இப்போது GO என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

6. சில நிமிடங்களில் உங்களுக்கு கீழே உள்ள சிறிய விண்டோ வரும். 


அவ்வளவு தான் இனி உங்கள் பென் டிரைவ் மூலம் OS இன்ஸ்டால் செய்து விடலாம்.

நன்றி. நவீன மாற்றம் 

வியாழன், 21 நவம்பர், 2013

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?








நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?



முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து 
இந்த தளம் சென்று  , உங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து CALCULATE கொடுக்கவும்.

இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.

அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.

டிரையல்விஷன் சாப்ட்வேர்களின் காலகெடு தேதியை நீடிக்க.


காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கின்றது. எல்லாவற்றையும் நிறுத்தலாம். ஆனால் காலத்தை நம்மால் நிறுத்த முடியுமா? வாய்ப்பே இல்லை.சாப்ட்வேர் சோதனை பதிப்பாக வாங்குவோம். சில நாட்களில் அதற்கான நேரம் முடிந்ததும் ஒப்பன் ஆகாது.நாட்களை நீடிக்க(நேரத்தை நீட்டிக்க) - என்றும் மார்க்கென்டேயனாக சாப்ட்வேர் நமக்கு ஒத்துழைக்க இந்த சாப்ட்வேரை நாம் நமது கணிணியில் இன்ஸ்டால் செய்யவேண்டும்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கணிணியில் உள்ள டிரையல் விஸன் சாப்ட்வேரின் .Exe பைலை  நீங்கள் தேர்வு செய்யுங்கள்.புதிய தேதியினை தேர்வு செய்யுங்கள். பக்கத்திலேயே உங்களுக்கு காலண்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது பாருங்கள்.
தேவையான தேதியை தேர்வு செய்யுங்கள்.Enter a name for create desktop icon என்கின்ற விண்டோவில் ஒரு புதிய பெயரை சாப்ட்வேருக்கு நிறுவுங்கள்(வையுங்கள்). அடுத்து்ள்ள Create Desktop Short-cut  கிளிக் செய்யுங்கள் இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் சாப்ட்வேர் அமரந்துகொள்ளும். இப்போழுது நீங்கள் நீடிப்பு செய்த சாப்ட்வேரின் பழைய Desktop short cut.Startup முதலியவற்றை நீக்கி விடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த ஐ-கானை கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு சாப்ட்வேர் தடையில் லாமல் வேலை செய்யும்.
பயன்படுத்திப்பாருங்கள்.
நன்றி.வேலன்.

பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !





அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்

ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்


பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.


முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· வாக்காளர் அடையாள அட்டை
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
· துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய்சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.


அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.

புதன், 20 நவம்பர், 2013

மென்பொருள் இல்லாமல் Hard Disk ஐ Partition பிரிப்பது எப்படி?



கணனியை Format  செய்யாமல் Partition களை  உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?  Format  செய்து பின்  hard disk கினை தேவையானpartition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.

இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி  செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய  Partition ஒன்றை  SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம்.

1) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்பதை தெரிவு செய்யுங்கள் பின் Computer Management Windowதோன்றும்.

2) அதில்  Storage  சென்று Disk management என்பதை clickசெய்யுங்கள்.

3) அதில் வன்தட்டு , எனைய  storage media க்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு Partition செய்யவேண்டிய Disk Driveவினை தெரிவுசெய்யுங்கள்.

4) பின்னர் அதில் Right click செய்யது  Shrink Volume என்பதை click செய்யுங்கள்.    அதன் பின்னர் windows தன்னியக்கமாக  அந்த Partition  இல் உள்ள  free space ன் அளவை காட்டும்.

5) Shrink வின்டோவில் partition பிரிக்க தேவையான disk size வழங்குங்கள். இதன் போது hard disk கில் காட்டப்படும் free space இன் அளவினை பொருத்து தீர்மானிக்க.


6) பின்னர் shrink என்பதை click செய்யுங்கள் .சில வினாடிகளிலேயே புதிய  Disk கோப்புகளுக்கு எதுவித பாதிப்புகளை ஏறப்படுத்தால் தோன்றும்.

7) புதிதாக உருவாக்கப்பட்ட Disk இன்னும் accessibleசெய்யப்படவில்லை.

8) இப்பொழுது unallocated drive இல் Right click செய்து New Simple Volume என்பதை  தெரிவு செய்யுங்கள்.

9) Next பொத்தானை Click செய்க .இப்பொழுது Partition னுக்கு தேவையான size இனை வழங்குங்கள். (you can choose whole size right now).

10) Drive Letter இனை தெரிவு செய்த பின் Next பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

11) பின்னர் Format Settings  இல் NTFS என்பதை File System  பிரிவில் தெரிவு செய்யுங்கள்.  Allocation Unit Size பிரிவில் Default என்பதையும். Volume label இல் New Volume எனவே விட்டுவிடலாம். (தேவையானால் மாற்றிக்கொள்ளவும் முடியும்).


12) Perform a Quick Format என்பதை Check இசய்யது Nextபொத்தானை click செய்யுங்கள் .
புதிய வன்தட்டுப் பிரிவு தயாராகிவிட்டது.

நன்றி. நவீன மாற்றம் 

கணினி மெதுவாக இயங்க காரணகளும், அதற்கான‌ தீர்வுகளும்.




கணிணி வாங்கிய‌ புதியதில் வேக மாக இயங்கிய நம் கணினி சில மாதங்களி ல் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக் காதது தான் மிக முக்கியமான காரண ம். 
இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவி ல் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணங்கள்:

  1. 1. மிகக் குறைந்த Hard Disk Space
  2. 2. நிறையProgram-கள் இயங்கிக்கொண்டு இருப்பது.
  3. 3. Data Corruption
  4. 4. அதிக சூடாகுதல்
  5. 5. Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
  6. 6. Hardware Problems
  7. 7. Driver பிரச்சினை

இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.
Reboot :

உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

Hard Disk Space
இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் 


மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.
Hard drive corrupted or fragmented
இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம்கவனிக்க வேண்டும்.

Run Scan Disk – இது Hard Disk – இல் ஏதே னும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check
இதில் Start என்பதை கிளிக் செய்யவும்.
 Scan ஆரம்பித்து விடும்.

அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs
சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக் ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக் கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். 

CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப் பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.

கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக 
இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.
Virus பிரச்சினைகள்
இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்
உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் 




மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.
இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்
இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் 

கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart 
செய் யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். 

இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்
மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சி னையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். 

இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல்
உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம்மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). 

புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.

Registry Cleaner பயன்படுத்துதல்
பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.



Operation System இன்ஸ்டால் செய்தல்

மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள்

மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.
நன்றி. நவீன மாற்றம்