ஜன்னல் ஓரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

ஸ்டார்ட் மெனுவில் தேவையான மெனுவினை நாம் சேர்க்கலாம் - எளிதில் நீக்கலாம்.அதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். சாதாரண ஸ்டார்ட் மெனு உங்களுக்கு கீழ்கண்டவாறு இருக்கும்.
 டாக்ஸ்பாரில் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும்.ப்ராபர்டிஸ் கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோ உங்களுக்கு ஓப்பன் ஆகும். அதில் உள்ள Customize என்பதனை கிளிக் செய்யவும்.
 வரும் விண்டோவில் Advanced (அட்வான்ஸ்ட்) என்பதை கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில் Start menu items என்பதில் உங்களுக்கு தேவையான மெனு விவரங்களின் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக்செய்வதன் மூலம் எளிதில் மெனுக்களை நீக்கலாம் - சேர்க்கலாம்.
ரன் மெனு உட்பட நீக்கப்பட்ட ஸ்டார் மெனு வினை கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.
புதியவர்கள் அறிந்துகொள்ளவே இதனை பதிவிட்டுள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வேலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக